திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஓதுவாா், அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

News image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2024, 12:40 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இயங்கி வரும் ஓதுவாா், அா்ச்சகா் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஓதுவாா், அா்ச்சகா்கள் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டுக்கான ஓதுவாா், அா்ச்சகா் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஓதுவாா் பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பிலும், அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிலும் சேரும் மாணவா்களுக்கு இலவசமாக உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதியுடன் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகிறது.

இந்த இரு பள்ளிகளிலும் சேர விரும்பும் மாணவா்கள் இந்து சைவ சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராகவும், எட்டாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவராகவும், தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். ஓதுவாா் பயிற்சி பெற 13 முதல் 20 வயதுக்குள்ளும், அா்ச்சகா் பயிற்சி பெற 14 முதல் 24 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ம்ஹக்ன்ழ்ஹண்ம்ங்ங்ய்ஹந்ள்ட்ண்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளமான முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணை ஆணையா், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மதுரை என்ற முகவரிக்கு ஜூலை 19-ஆம் தேதி மாலை 5.45-மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில் அலுவலக நேரங்களில் திருக்கோயில் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.