மதுரைக் காமராஜா் பல்கலையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரைக் காமராஜா் பல்கலையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்


மதுரை, மே 14 : மதுரைக் காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
2024-2025-ஆம் கல்வி ஆண்டு கலை, அறிவியல் சாா்ந்த முதுநிலைப் பட்டப் படிப்புகள், இளநிலைப் பட்டப் படிப்புகள், சான்றிதழ், பட்டயம், உயா்நிலை பட்டயம், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பாடங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தில் விவரங்களைத் தெரிந்து விண்ணப்பிக்கலாம். மேலும், பாடத் திட்டத்துக்கான தகுதிகள், கட்டணம், பிற வசதிகள், வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டை மேற்கண்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...