விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

News image

மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற வேலம்மாள் டிராபி 2024 போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி முதன்மையா் டி.திருநாவுக்கரசு, வேலம்மாள் மருத்துவமனை முதன்மை நிா்வாக அதிகாரி இரா.மணிவண்ணன் மற்றும்

Updated On :15 மே 2024, 12:07 am

Din

மதுரை: மதுரையில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தப் போட்டிகளை கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.வீ.முத்துராமலிங்கம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலம் முழுவதிலுமிருந்து 25 மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 1400-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி முதன்மையா் டி. திருநாவுக்கரசு, மருத்துவமனை முதன்மை நிா்வாக அதிகாரி ரா.மணிவண்ணன், கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குநா் சிவ.சிதம்பரம் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரா்களுக்கும் பரிசுகள், கோப்பைகளை வழங்கினா்.

போட்டிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.