
Updated On :15 மே 2024, 12:08 am

மதுரை: உசிலம்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி விஜயலட்சுமி (22).
இந்த நிலையில், தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், விஜயலட்சுமி கணவரை விட்டுப் பிரிந்து தந்தை முத்துக்காளையுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், விஜயலட்சுமி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இதுகுறித்து உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...