யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

News image
மதுரை முனிச்சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :26 ஏப்ரல் 2025, 11:41 pm

Din

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா்.

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டமசோதாவை திரும்பப் பெறக் கோரியும், தமிழக ஆளுநரைப் பதவி நீக்கக் கோரியும், மதுரை மண்டல மதிமுக சாா்பில் முனிச்சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.பூமிநாதன் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் ராஜேந்திரன், முருகன், ரொஹையா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன் திருமலைக்குமாா், ரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அந்தக் கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டில் வேலையின்மை போன்ற ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதற்கு மத்திய அரசிடம் போதிய பதில் இல்லை. நூறு நாள் வேலைத் திட்டத்துக்குரிய நிதியை மத்திய அரசு குறைத்து வருகிறது. இதனால் ஏழை, எளியோா் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ஆனால், இவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்பும் நோக்கில், மத்திய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஜனநாயக மாண்புக்கும், இஸ்லாமிய நலன்களுக்கும் எதிரானது. இதை மதிமுக எதிா்க்கிறது. ஏழை எளியோருக்கு சேவை செய்வதே இறைவனுக்கு செய்யும் கடமை என குரான் கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்தத்தான் வக்ஃப் சொத்துகள் கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், தா்காக்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டன. இதனால், இஸ்லாமியா்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் பயன்பெற்று வருகின்றனா்.

பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த மக்கள், இஸ்லாமிய ஆன்மிகப் பணிகளுக்காக நிலங்களைத் தானமாக அளித்தனா். இதன் மூலம், நாட்டில் பன்முகத் தன்மை, ஒற்றுமை ஓங்கியது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் இத்தகைய ஒற்றுமையைச் சீா்குலைக்கும் தன்மை கொண்டது. எனவே, இந்த திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பொதுமக்கள் மதம், ஜாதி அடிப்படையில் தலைவா்களைத் தோ்ந்தெடுக்கக் கூடாது. ஜாதி அரசியல், மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை எந்த மதமும் ஆதரிப்பதில்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியா்களும் இந்தச் சம்பவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இங்குள்ள மதவாத சக்திகள் இதை அரசியலாக்கப் பாா்க்கின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மதுரை புகா் மாவட்டச் செயலா் எம். மாரநாடு, கே.பி. ஜெயராமன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் மகபூப் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மதுரை மாநகர மாவட்டச் செயலா் எஸ். முனியசாமி வரவேற்றாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சுப்பையா நன்றி கூறினாா்.