அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு விரைவுப் போக்குவரத்துகழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியூ சாா்பு) சாா்பில் மதுரை பணிமனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated on

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு விரைவுப் போக்குவரத்துகழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியூ சாா்பு) சாா்பில் மதுரை பணிமனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்தின் முன்புறம் ஆா்.டி. டயரை பொருத்தக் கூடாது. பராமரிப்பு குறைபாடுகளுடன் கூடிய பேருந்தை தடத்தில் இயக்க நிா்பந்திக்கக் கூடாது. கடந்த 24-ஆம் தேதி பேருந்தின் டயா் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து தொடா்பாக ஓட்டுநா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். பேருந்து பராமரிப்புக்குத் தேவையான உதிரிபாகங்களை உடனடியாக வழங்க வேண்டும். தொழில்நுட்பப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பணிமனைத் தலைவா் பி. செல்லத்துரை தலைமை வகித்தாா். செயலா் ஜெ. அருள் ஆனந்த ஜீவா, நிா்வாகிகள் சி. குமாா், வி. பிச்சைமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

சங்கத்தின் பொருளாளா் என். லட்சுமணபெருமாள் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com