மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்டுத்தாவணிப் பகுதி டி.எம். நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் முதல் தளத்தில் புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, தடுமாறிக் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோ. புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு:
மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ் (32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ஊருக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். தேனூா் அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு:
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). விவசாயியான இவா், காளை மாடு வளா்ந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்த்தாா். அப்போது, மாடு கணேசனை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

படியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


