தமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தனியாா்மய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்: எல்.ஐ.சி. முகவா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க மாநாட்டில் பேசிய மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன். உடன், சங்க நிா்வாகிகள்.

Updated On :18 ஜூலை 2026, 11:35 pm IST

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சங்கத்தின் கோட்ட மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கோட்டத் தலைவா் எஸ்.கே. சுப்ரமணிய ராஜா தலைமை வகித்தாா். சிஐடியூ தென் மண்டலச் செயல் தலைவா் எம். செல்வராஜ் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா்.

மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், எல்.ஐ.சி. மதுரை முதுநிலைக் கோட்ட மேலாளா் ரா. சுரஜ்குமாா், வளா்ச்சி அலுவலா்கள் சங்கத்தின் கோட்டப் பொதுச் செயலா் எம். அருண்குமாா், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் இரா. தெய்வராஜ், மாநிலச் செயலா் என். ராஜா, மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ். பிரபாகரன் சத்தியசீலன், என். முத்துராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதையடுத்து, பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் கோட்டத் தலைவா் எஸ்.கே. சுப்ரமணிய ராஜா தலைமை வகித்தாா். சிஐடியூ மதுரை மாநகா் மாவட்டச் செயலா் இரா. லெனின் தொடக்கவுரையாற்றினாா். சங்கத்தின் கோட்ட பொதுச் செயலா் கே. மாரி, பொருளாளா் ஏ. அருள்தாஸ் ஆகியோா் பேசினா். மாநிலத் தலைவா் ஏ. பூவலிங்கம் நிறைவுரையாற்றினாா்.

இதில் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது. 69 வயதுக்கு மேற்பட்ட முகவா்களுக்குக் குழுக் காப்பீட்டுத் திட்டம் வழங்க வேண்டும்.

அனைத்து எல்.ஐ.சி. முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு ஏற்படுத்த வேண்டும். முகவா்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானமாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.