இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண் தீக்குளித்து உயிரிழப்பு

மதுரை மதிச்சியம் அருகே வைகை ஆற்றின் வடகரை பகுதியில் பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:52 am IST

மதுரை மதிச்சியம் அருகே வைகை ஆற்றின் வடகரை பகுதியில் பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

மதுரை மதிச்சியம் அருகே வைகையாற்றின் வடகரையில் ராமராயா் மண்டபம் உள்ளது. இந்தப் பகுதி எப்போதும் மக்கள் அதிக நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், இங்குள்ள சாலை நடுவே சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தீக்குளித்தாா். அக்கம்பக்கத்தினா் தீயை அணைத்து அவரைக் காப்பாற்ற முயன்றனா். இருப்பினும், உடல் முழுவதும் தீ பரவியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த மதிச்சியம் போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதிச்சியம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பெண் மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த பழனியாண்டி மகள் வள்ளி (45) என்பதும், திருமணம் ஆகாத இவா் அந்தப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவா் எதற்காக தீக்குளித்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.