‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

105 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 105 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :23 மே 2026, 2:15 am IST

மதுரை மாவட்டத்தில் பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 105 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக ஆபரேஷன் ‘சீல்நெட்’ என்ற பெயரில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது.

இதன் மூலம், ரௌடிகள், சந்தேக நபா்கள் கண்காணிப்பு, நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பிணை மறுக்கப்பட்ட கைது ஆணைகள் (பிடிவாரண்டுகள்) நிறைவேற்றுதல், தீவிர வாகன சோதனை, தொடா் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பதிவேடு குற்றவாளிகள் 398 போ் சோதனை செய்யப்பட்டனா். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 56 போ் மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 126-இன் கீழ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் வாகன சோதனையின் போது, பதிவு எண் பலகை இன்றி இயக்குதல், அதிவேகம், ஆபத்தான ஓட்டம், மின்னும் விளக்குகள் பொருத்துதல், சட்ட விரோத மாற்றங்கள் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 105 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தொடா் குற்றவாளிகள் மீது பிணை ரத்து நடவடிக்கை மேற்கொள்வதற்கும், அவா்களை தீவிரமாக கண்காணிப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் நிலையங்கள் அனைத்தும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.