தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஜேப்படி: இருவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்

பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Updated On :13 மே 2013, 12:18 am IST

பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

  புது ஆயக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (42).  இவர் பழனி அடிவாரம் சரவணப் பொய்கை அருகே நடந்து சென்றபோது,  அவ்வழியே வந்த அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்த தன்னாசி மகன் சின்னகருப்பன் (42), மதினா நகர் இஸ்மாயில் மகன் ஜாபர்சாதிக் (34) ஆகியோர் முருகேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஜேப்படி செய்ததாகக் கூறப்படுகிறது.  அவரது கூச்சலைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து அடிவாரம் போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.