இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க கால்கோல் விழா

திண்டுக்கல்லில் டிச.9ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க வியாழக்கிழமை கால்கோல் விழா நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:18 pm

DIN

திண்டுக்கல்லில் டிச.9ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரங்கம் அமைக்க வியாழக்கிழமை கால்கோல் விழா நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள அங்குவிலாஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வனத்துறை  அமைச்சர் சி.சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.9ஆம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார் என்றார்.
கால்கோல் விழா நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பா.பரமசிவம் எம்எல்ஏ, திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.