இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ராணுவப் பள்ளியில் சேர டிச.5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் சேர டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:13 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் சேர டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் ராணுவ பள்ளியில் (சைனிக் பள்ளி) 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 2018 ஜனவரி 7ஆம் தேதி குறிப்பிட்ட மையங்களில் நடைபெற உள்ளது.  6ஆம் வகுப்பில் சேர 2007 ஜூலை 2 ஆம் தேதி முதல் 2008 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 2004 ஜூலை 2-ஆம் தேதி முதல் 2005 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் விண்ணப்ப படிவங்கள் குறித்த விவரங்களை சைனிக் பள்ளியின் ‌w‌w‌w.‌s​a‌i‌n‌i‌k‌s​c‌h‌o‌o‌l​a‌m​a‌r​a‌v​a‌t‌h‌i‌n​a‌g​a‌r.‌e‌d‌u.‌i‌n  என்ற இணையதளத்தின் மூலமாகவும், 04252-256246,  256296 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் இறுதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் டிசம்பர் 5ஆம் தேதிக்குள்  சென்றடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.