தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

பழனியில் ரூ.3 லட்சம் காலாவதியான  குளிர்பானங்கள் பறிமுதல்

பழனியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்களை, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:12 am IST

பழனியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்களை, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
         திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பெப்சி குளிர்பானங்களை விற்கும் உரிமையை சேட் என்பவர் பெற்றுள்ளார். ஆனால், இதன் பழைய விற்பனை உரிமையாளரான பாலசுப்பிரமணி என்பவரும் அதே குளிர்பானங்களை குறைந்த விலையில் விற்று வந்துள்ளார். 
இது குறித்து சேட் விசாரித்தபோது, பாலசுப்பிரமணி பலரிடமும் காலாவதியான குளிர்பானங்களை வாங்கி விற்பனை செய்வது தெரியவந்தது. 
    அதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சேட் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் நடராஜன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மோகனரங்கம், ஜாபர் உள்ளிட்டோர் திங்கள்கிழமை இரவு கிட்டங்கியை கண்டுபிடித்து பூட்டு போட்டனர். ஆனால்,  உரிமையாளர் வேறு ஒரு பூட்டை போட்டதால், செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு டிஎஸ்பி. மகேஷ், கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி உள்ளிட்டோர் முன்னிலையில், கிட்டங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
    அந்த கிட்டங்கியில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான லெஹர் பெப்சி, மிரிண்டா, ஸ்பிரைட் உள்ளிட்ட குளிர்பானங்கள் இருந்தது கண்டறியப்பட்டன.
   இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் நடராஜன் கூறுகையில், கிட்டங்கியில் காலாவதியான, காலாவதியாகாத என இரண்டு குளிர்பானங்களும் கலந்துள்ளன. இதில், காலாவதியானவை மட்டும் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலானவை. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
    சேட் கூறுகையில், இந்த காலாவதியான குளிர்பானங்கள் அடிவாரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கூடங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.