கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா வரும் 11-ம் தேதி முதல் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை தெரிவித்தார்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான செண்பகனூர், வடகவுஞ்சி, கோக்கர்ஸ்வாக், பச்சைமரத்து ஓடை, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் தற்போது பூத்துள்ளது.
கொடைக்கானலில் பூக்கும் குறிஞ்சி மலர்களுக்காக ஒரு திருவிழா நடத்த வேண்டுமென கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த பலர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறையிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா நடத்த முடிவு செய்தது இதற்கான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, வருவாய் கோட்டாட்சியர் மோகன், வட்டாட்சியர் பாஷியம், ரோட்டரி சங்கத் தலைர் செல்வக்குமார், செயலர் தனசேரன், அகில இந்திய கட்டுமான சங்கத் தலைவர் மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வினய் கூறியதாவது:
கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா வரும் 11-ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வரை ஒரு மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், குறிஞ்சி மலர் குறித்த அறியவகை செய்திகளை துண்டு பிரசுரம் மூலமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படும். குறிஞ்சி மலர் குறித்த புகைப்பட கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறும்.
கீழ் குண்டாறு பணிகளில் 60 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சியிலிருந்து ஏரிச்சாலை வரை அமைக்கப்பட்ட நவீன மின் விளக்குகள் விரைவில் சரி செய்யப்படும். கொடைக்கானல் ஏரிச்சாலையிலிருந்து பெருமாள்மலை வரை சாலைகளையும், ஓடைப் புறம்போக்கு, மயான இடங்கள் ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றப்படும் என்றார். அதைத்தொடர்ந்து, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் வெளிநோயாளிகள் வருகை குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், அங்கு உள்ள தாய் - சேய் நலவிடுதியை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








