தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கம்
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.


திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு) லதா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ப.பார்வதி முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தி.சு.ஜெகதீஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
கண்காட்சி திறப்புக்கு பின் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் பேசியதாவது:
அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் தன்னார்வலர் பயிலும் வட்டத்தில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கேற்று அரசு மற்றும் பொதுத் துறை நிறுனங்களில் பணிபுரியும் வாய்ப்பினை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...