தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்.3 முதல் ஏப்.15 வரை முதல்கட்டமாகவும், ஏப்ரல் 17 முதல் ஏப். 29 வரை 2ஆம் கட்டமாகவும், மே 1 முதல் மே 13 வரை 3ஆவது கட்டமாகவும், மே 15 முதல் மே 27 வரை 4ஆவது கட்டமாகவும், மே 29 முதல் ஜூன் 10 வரை 5ஆம் கட்டமாகவும் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் பயிற்சி வகுப்புகள், நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைப்பதற்கான நீச்சல் வகுப்பு என 3 நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
12 நாட்களுக்கு ரூ.1500 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக்கொள்ளலாம். திங்கள்கிழமை விடுமுறை நாளாகும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியிலும், 0451-2461162.என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

