திண்டுக்கல், செம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழை, அக்னி வெயிலின் தாக்கத்தை குறைத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழை, கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்தது மட்டுமின்றி, குடிநீர் பிரச்னைக்கும் தற்காலிக தீர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் பகுதியில் புதன்கிழமை மாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. திண்டுக்கல் மட்டுமின்றி, செம்பட்டி, வக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையினால் புதன்கிழமை பிற்பகல் முதல் திண்டுக்கல் பகுதியில் குளிர்ச்சி நிலவியது.
பழனியில்: பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. புதன்கிழமை மாலை பழனியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. பழனியை அடுத்த அமரபூண்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழனி மலைக்கோயிலில் மழை பெய்தநிலையிலும் ஏராளமான பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர். காற்று மற்றும் மழை காரணமாக ரோப்கார் இயக்குவதில் இடையூறு ஏற்பட்டது. பின்னர் இயக்கப்பட்ட ரோப்காரில் பக்தர்கள் பயணித்தனர்.
கள்ளிமந்தையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி நால்ரோடு, பெருமாள்கோவில் வலசு, பூசாரிபட்டி, பாலப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று நாள்கள் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. மேலும் விவசாயிகள் வெள்ளைச்சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை பயிரிடவும் தயாராகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

4 நாள்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்?

பதின் வயதினருக்கான சாட்ஜிபிடி ஏஐ அறிமுகம்!

நடக்கும் கொலைகளுக்கு குறிப்பிட்ட ஆட்சி பொறுப்பாகாது! திருமாவளவன் எம்.பி. பேட்டி
விடியோக்கள்


