உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஒட்டன்சத்திரம் அருகே புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளிக் கட்டடம் மற்றும் சமுதாயக் கூடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளிக் கட்டடம் மற்றும் சமுதாயக் கூடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
மார்க்கம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (முஸ்லிம்) பள்ளிக்கு ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் செலவில் புதியதாக பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எமிலிராணி தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் நிஜாமுத்தீன், இம்தாதி, வட்டாரக் கல்வி அலுவலர் சகாயசெல்வி, ஜோசப் குழந்தைராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.கே.அழகியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் ப.விஜயலட்சுமி நன்றி கூறினார்.
 அதே போல கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பராசரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தை அர.சக்கரபாணி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.