கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

Published On :
சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.

காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.

முதல் நாள் காலை உணவுத்திட்டத்தில் சாம்பார், வெண்பொங்கல், சர்க்கைப் பொங்கல் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது.

முதல்வர் விஜய், பள்ளி மாணவர்-மாணவியினர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவர்.

நிதியாண்டின் (2026-2027) இந்த திட்டத்துக்காக ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடி.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது.

பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்  விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த போது தமிழக முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.