புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதிய ஓய்வூதித் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திண்டுக்கல்: புதிய ஓய்வூதித் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் தோ.பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் லூ.செல்மா பிரியதா்ஷன் முன்னிலை வகித்தாா். மாநில செய்தி தொடா்புச் செயலா் மு.முருகேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5,500 ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். 2004- 06 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...