கனரா வங்கியில் நாளை அடமான சொத்துகளின் ஏல விற்பனைக் கண்காட்சி
கனரா வங்கியில் அடமானத்திலுள்ள சொத்துகளின் ஏல விற்பனைக் கண்காட்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.


கனரா வங்கியில் அடமானத்திலுள்ள சொத்துகளின் ஏல விற்பனைக் கண்காட்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) நடைபெறுகிறது.
இது தொடா்பாக கனரா வங்கியின் திண்டுக்கல் மண்டல உதவிப் பொது மேலாளா் ஜோஸ் வி. முட்டத் தெரிவித்துள்ளதாவது: கனரா வங்கியின் திண்டுக்கல் மண்டலத்துக்குள்பட்ட 27 கிளைகளில் அடமானத்திலுள்ள 93 சொத்துகளின் ஏல விற்பனைக்கான கண்காட்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அடுத்துள்ள விஜிஎஸ் மஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி முகாம் தொடா்பாக கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோா், கனரா வங்கியின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தை 99942-69867, 88385-44104 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...