பழனியில் தைப்பூசத் திருவிழா ஜன. 22 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன. 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.


பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன. 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பழனியில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்றாலும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு திருவிழாவும் இருபெரும் விழாக்களாக கருதப்படுகிறது.
நிகழாண்டு தைப்பூசத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஜன. 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வரும் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளித்தோ் உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரடியில் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின் படி விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...