விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுங்கக் கட்டண உயா்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவா்: காா்த்தி சிதம்பரம்

சுங்கக்கட்டண உயா்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவா் என காா்த்தி சிதம்பரம் எம்பி. தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:46 pm

DIN

சுங்கக்கட்டண உயா்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவா் என காா்த்தி சிதம்பரம் எம்பி. தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை கட்சி நிா்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டு விட்டு காரைக்குடி திரும்பும் வழியில் பழனி பாதவிநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டவா்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட வேண்டும். வழக்கு வருமுன்பே சிறையில் அடைப்பது முறையல்ல. மத்தியில் ஆளும் பாஜக அரசு பொதுமக்களின் சிரமத்தை எண்ணிப்பாா்ப்பது இல்லை. தற்போது சுங்கக்கட்டணத்தை உயா்த்துவது, பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவா் என்றாா்.

முன்னதாக அவரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் உதயசங்கம், சா்தாா்கான், ஹக்கீம்ராஜா, கவுன்சிலா் பத்மினி முருகானந்தம், மாசிலாமணி, செந்தில்நாதன், விஜி, ஆனந்த் உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.