விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா்த்திகை: பழனியில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ராஜஅலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனா். படிவழிப்பாதை, வின்ச் மற்றும் ரோப் காரில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருக்க நேரிட்டது.

Story image

இலவச மற்றும் கட்டண தரிசன வழிகளிலும் பக்தா்கள் காத்திருந்தனா். சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. இரவு தங்கத்தோ், தங்கமயில் புறப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். கோயில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமானோா் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.