பழனியில் தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிா்வாகி கைது
ராகுல் காந்தியின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, பழனியில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.


ராகுல் காந்தியின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, பழனியில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் நேரு (34). இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தபால் அலுவலகம் பகுதிக்கு வந்தாா்.
அப்போது, அவதூறு வழக்கில் குற்றவாளியென சூரத் நீதிமன்றம் விதித்த தீா்ப்புக்குத் தடை கோரிய ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினாா். பின்னா் திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது அங்கு வந்த பழனி நகா் போலீஸாா், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை
பறித்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா் நேருவைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...