நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
DOTCOM

நத்தம் அருகே லிங்கவாடி. மலையூர் மலைகிராமத்துக்கு குதிரை மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது.

அலங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள மலையடிவாரப் பகுதியான எல்லைப் பாறையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் லிங்கவாடி ஊராட்சியை சேர்ந்த மலைக்கிராமமான  லிங்கவாடி. மலையூர்  உள்ளது.

இங்கு 237 ஆண் வாக்காளர்கள், 249 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 486 பேர் உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

DOTCOM

இதற்காக மண்டல அலுவலர் கணேஷ் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு பெட்டி மற்றும் தேவையான பொருள்கள் அடிவாரத்தில் இருந்து குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்டது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com