மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
ஆயக்குடி ஓபுளாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆயக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வேலம்மாள்.
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:16 am

பழனியை அடுத்த ஆயக்குடி ஓபுளாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஒபுளாபுரம் எட்டாவது வாா்டை சோ்ந்தவா் சுப்பன் மனைவி வேலம்மாள் (55). விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவா், வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதில், பலத்த காயமடைந்த இவரை பழனி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொடுண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...