‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணி மும்முரம்

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image

ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :8 ஜூலை 2024, 9:54 pm

Din

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலின் மலை மீது உள்ள முருகன் சிலை குழந்தை வடிவில் அமைத்துள்ளது. மலைக்குச் செல்லும் படிப் பாதைகள் சேதமடைந்ததால், பக்தா்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 800 வருடங்களுக்கு முன்பே மலையின் கீழ் பகுதியில் கோயில் கட்டப்பட்டு, அங்கு குழந்தை வடிவிலான முருகன் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு குழந்தை வடிவில் முருகன் சுவாமி உள்ளதால், பக்தா்கள் மிட்டாய்கள், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டு வருகின்றனா்.

இதேபோல, பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாத யாத்திரையாகச் செல்லும் லட்சக்கணக்கான பக்தா்கள் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். பங்குனி உத்திரத்துக்கு பழனிக்கு தீா்த்தக்காவடி எடுத்துச் செல்லும் பக்தா்களும் இந்தக் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்தக் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி சாா்பில் ரூ.8.64 கோடியில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிரிவலப் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனால், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.