‘இ-பாஸ்’ பெற்ற 32 சதவீத வாகனங்கள் மட்டும் கொடைக்கானலுக்கு வந்தன

திண்டுக்கல்: ‘இ-பாஸ்’ நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், பதிவு செய்த 3,792 வாகனங்களில் 32 சதவீதம் மட்டுமே செவ்வாய்க்கிழமை கொடைக்கானலுக்கு வந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி

‘இ-பாஸ்’ வழங்கும் நடைமுறை ‘இ-பாஸ்’ நடைமுறை மே 7 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மே 6 முதல் 7-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை வெவ்வேறு தேதிகளில் 26,694 வாகனங்கள் கொடைக்கானல் வருவதற்கு விண்ணப்பித்து ‘இ-பாஸ்’ பெறப்பட்டன. இந்த நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளான செவ்வாய்க்கிழமை 3,792 வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டன. இதன் மூலம் 28,168 சுற்றுலாப் பயணிகள் வருவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால், ‘இ-பாஸ்’ பெற்ற 3,792 வாகனங்களில் 1,217 வாகனங்கள் மட்டுமே செவ்வாய்க்கிழமை கொடைக்கானலுக்கு வந்தன. அதேநேரத்தில் அந்த வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்களும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com