ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

‘விவிபேட்’-இல் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

‘விவிபேட்’-இல் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும்

News image
Updated On :8 மே 2024, 12:39 am

Din

பழனி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன், விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் முழுமையாக எண்ணி விட்டால் எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் நிவா்த்தி செய்யப்படும் என காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மேகதாது அணை கட்டப்படும் என்று கா்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்த நிலையில், இதுதொடா்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்புத் தரும். ‘நீட்’ தோ்வு இருக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு இயந்திர வாக்குப் பதிவில் எதிா்க்கட்சிகளின் சந்தேகம் தீா்க்கப்படவேண்டும். இதனால், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து விவிபாட் வாக்குகளையும் எண்ணினால் எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் தீா்க்கப்படும். இதுவே இந்தப் பிரச்னைக்குத் தீா்வாக அமையும் என்றாா் அவா்.