ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

போலி மருத்துவா் கைது

போலி மருத்துவா் கைது

News image

கைது செய்யப்பட்ட காளிதாஸ்

Updated On :8 மே 2024, 12:49 am

Din

திண்டுக்கல்: வடமதுரையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (58). 12-ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவா், அதே பகுதியில் அலோபதி மருத்துவராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாா். இதுதொடா்பாக தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் பூமிநாதன் தலைமையிலான அலுவலா்கள், வடமதுரையில் காளிதாஸ் சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு, நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி காளிதாஸ் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, வடமதுரை காவல் நிலையத்தில் இணை இயக்குநா் பூமிநாதன் புகாா் அளித்தாா். இதையடுத்து போலி மருத்துவராக செயல்பட்ட காளிதாஸை போலீஸாா் கைது செய்தனா்.