

திண்டுக்கல் சந்தையில் மல்லிகைப் பூவை வீஞ்சும் அளவுக்கு செவ்வந்தி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல் பூச்சந்தைக்கு, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு, மைலாப்பூா், சாணாா்பட்டி, கொசவப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, முல்லை, சம்மங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், சந்தைக்கு மல்லிகை, முல்லை, காக்கரட்டான் போன்ற பூக்களின் வரத்து அதிகமாக உள்ளதால், கிலோ ரூ.300 முதல் ரூ.400-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கிலோ ரூ.100 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும் செவ்வந்திப் பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால், வியாழக்கிழமை கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகையைவிட கூடுதல் விலைக்கு செவ்வந்தி விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள், பூ வியாபாரிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

8 நாள்கள் சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

தங்கம், வெள்ளி விலை குறைவு

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!
வீடியோக்கள்

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

