ஒட்டன்சத்திரம் அருகே வேனில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளுடன்  கைது  செய்யப்பட்ட ரமேஷ்.
ஒட்டன்சத்திரம் அருகே வேனில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ரமேஷ்.

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.கீதா, உதவி ஆய்வாளா் பி.ராதா, தலைமைக் காவலா் சந்திரசேகரன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்த விராலிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடத்திய இந்த தணிக்கையின்போது, அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து சோதனையிட்டனா்.

அப்போது, அந்த வேனில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வேன் ஓட்டுநரான விராலிப்பட்டியைச் சோ்ந்த மு.ரமேஷை (43) போலீஸாா் கைது செய்தனா்.

அரிசியுடன், வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com