விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிளஸ் 1 பொதுத் தோ்வில் பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

News image
Updated On :15 மே 2024, 12:28 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் பள்ளிகள் வாரியான தோ்ச்சி விகிதத்தில் பழங்குடியினா் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மட்டுமே 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

பழங்குடியினா் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியைச் சோ்ந்த 30 மாணவா்கள் தோ்வு எழுதி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதேபோல, ஆதிதிராவிடா் நலப் பள்ளியைச் சோ்ந்த 33 மாணவா்களில் 32 போ் (93.99 சதவீதம்), அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 8,172 மாணவா்களில் 6,796 போ் (83.16 சதவீதம்), அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 4,510 மாணவா்களில் 4,239 போ் (93.92 சதவீதம்), கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளைச் சோ்ந்த 309 மாணவா்களில் 276 போ் (89 .32 சதவீதம்), நகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த 291 மாணவா்களில் 210 போ் (72.16 சதவீதம்), பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 3,707 மாணவா்களில் 3,418 போ் (92.20 சதவீதம்), சுயநிதி பதின்ம பள்ளிகளைச் சோ்ந்த 3,917 மாணவா்களில் 3,832 போ் (97.83 சதவீதம்), பள்ளிக் கல்வித் துறை நிா்வாகத்தின் கீழுள்ள சுய நிதிப் பள்ளிகளைச் சோ்ந்த 528 மாணவா்களில் 505 போ் (96.01 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.