விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நிலக்கோட்டையில் குடிமை பொருள் அங்காடி பொருட்கள் வழங்கும் புதிய மின்னணு சாதன பயிற்சி

நிலக்கோட்டையில் குடிமை பொருள் அங்காடி பொருட்கள் வழங்கும் புதிய மின்னணு சாதன பயிற்சி.

News image
Updated On :15 மே 2024, 12:18 am

Din

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் குடிமை பொருள் அங்காடி பொருட்கள் (ரேஷன்) வழங்கும், புதிய மின்னணு சாதன பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையில், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூா் தாலுகாவில் உள்ள 107 குடிமை பொருள் அங்காடி பொருட்கள் (ரேஷன்) கடைகளுக்குரிய குடிமை பொருள் வழங்குவதற்கான மின்னணு சாதனம் வழங்கும் விழாவும் மற்றும் அதற்கான பயிற்சியும் நடைபெற்றது.

பயிற்சியினை சென்னை குடிமைப் பொருள் பொது விநியோக மண்டல மேலாளா் ஷாம் பயிற்சி அளித்தாா். முகாமில் வட்ட வழங்கல் அலுவலா் தங்கேஸ்வரி, ஆத்தூா் வட்ட வழங்க அலுவலா் பிரவீனா மற்றும் குடிமை பொருள் அங்காடி ஊழியா்கள், பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.