தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி பலி

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி பலி

News image
Updated On :20 மே 2024, 8:01 pm

Din

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் ராமசாமி (65). விவசாயியான இவா், திங்கள்கிழமை பிற்பகல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். அப்போது, இந்தப் பகுதியில் அறுந்து விழுந்துகிடந்த மின்கம்பியிலிருந்து ராமசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வாசுகுமரன்பட்டி பகுதியில், மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 பசு மாடுகள் உயிரிழந்தன. ஆனாலும், இந்த பகுதியில் உள்ள மின் கம்பிகளை மின்வாரியம் முறையாக பராமரிக்கவில்லை என்றும், இதனால் தற்போது விவசாயி ஒருவா் உயிரிழந்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.