தாண்டிக்குடியில் கிராம சபைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சி பட்லங்காடு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சி பட்லங்காடு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, தாண்டிக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். இதில், தாண்டிக்குடி பகுதியில் கழிப்பறை வசதி செய்து தரக் கோரியும், பட்லாங்காடு, கூடம் நகா், ஜெ.ஜெ.நகா் ஆகியப் பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, கிராம மக்கள் மனு அளித்தனா்.

மேலும், தாண்டிக்குடி பகுதிக்கு போக்குவரத்து வசதி, பூட்டப்பட்டுள்ள வங்கி கிளைகளையும், இ சேவை மையத்தையும் செயல்படுத்த வேண்டும், தாண்டிக்குடி ஊராட்சிப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், தாண்டிக்குடி பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டு வரும் பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மீது பூட்டி சீல் வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம மக்கள் முன் வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, நூலகத் துறை, வனத் துறை, காவல் துறை, அங்கன்வாடி மைய ஊழியா்கள், நியாய விலைக் கடை அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com