/

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு

பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 7:28 pm

Din

பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள ஜவஹா் நகரில் வசித்து வருபவா் ரமேஷ். விவசாயி. இவரும், இவரது மனைவியும் வியாழக்கிழமை காலையில் அக்கரைப்பட்டியில் உள்ள தங்கள் தோட்டத்துக்கு விவசாய வேலைக்காக சென்று விட்டனா். இந்த நிலையில், பிற்பகலில் தோட்ட வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். பிறகு வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ. 50,000 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த பழனி நகா் காவல் நிலைய போலீஸாா் தடயங்களை சேகரித்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.