விநாயகா் சிலைகளில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது

விநாயகா் சிலைகளை அழகுப்படுத்தும் பணிக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Published on

விநாயகா் சிலைகளை அழகுப்படுத்தும் பணிக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் கூறியதாவது:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்கூறுகள், வைக்கோல்

போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com