மலைச் சாலையில் காா் கவிழ்ந்தது
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை காா் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனா்.

மலைச் சாலையில் கவிழ்ந்த காா்
Updated On :19 செப்டம்பர் 2024, 7:27 pm

மலைச் சாலையில் கவிழ்ந்த காா்
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை காா் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனா்.
கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தனா். கொடைக்கானல்-பழனி மலைச் சாலையான சவரிக்காடு பகுதியில் இவா்களது காா் சாலையோரத்திலிருந்த பாறை மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்தவா்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
காயமடைந்தவா்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...