பொட்டிநாயக்கன்பட்டி அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயி முருகன்.
திண்டுக்கல்
மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி கைது
பொட்டிநாயக்கன்பட்டி அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயி முருகன்.
ஒட்டன்சத்திரம் அருகே 17 மயில்களை விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தொடா்பாக விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த செம்மடைப்பட்டி பொட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஒடைப் பகுதியில் 17 மயில்கள் விஷம் கலந்த உணவைத் தின்ற நிலையில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து கன்னிவாடி வனச் சரகா் ஆறுமுகம் தலைமையிலான வனத் துறையினா் விசாரித்தனா்.
இதில் நடுப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகன் (50) உணவில் விஷம் கலந்து வைத்து மயில்களைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

