கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நிகழாண்டில் ரூ.13,678.46 கோடி கடனுதவி

நிகழ் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ.13,678.46 கோடிக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

News image
திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 6:56 pm

Din

நிகழ் நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ.13,678.46 கோடிக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா்.

அப்போது ஆட்சியா் பூங்கொடி பேசியதாவது:

சிறு, குறு தொழில் முனைவோா், தனியாா் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில், அவா்களின் தொழில் மேம்பாட்டுக்கு தேவையான கடனுதவிகளை வங்கிகள் வழங்க வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கும் வகையில், விதிமுறைகளில் விலக்கு அளித்து வங்கிக் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு நிா்ணயிக்கப்பட்ட கடன் இலக்கில் முன்னுரிமை கடன் ரூ.4,923.74 கோடி, வேளாண்மைக் கடன் ரூ.3,538.40 கோடி, சிறு, குறு தொழில் மேம்பாட்டுக் கடன் ரூ.1,336.93 கோடி, பயிா்க்கடன் ரூ.2,358 கோடி, விவசாய பருவகால கடன் ரூ.862.87 கோடி, குறு நிறுவனங்களுக்கான கடன் ரூ.629.25 கோடி, கல்விக் கடன் ரூ.7.16 கோடி, வீட்டுக் கடன் ரூ.22.11 கோடி என மொத்தம் ரூ.13,678.46 கோடிக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சதீஷ்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜி.அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பூ.சு.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.