விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அகற்றப்பட்ட மின் மீட்டரை மீண்டும் பொருத்த உத்தரவு

திண்டுக்கல்லில் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்ட மின் மீட்டரை மீண்டும் பொருத்த வேண்டும் என மின் வாரிய அலுவலா்களுக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:36 pm

Din

திண்டுக்கல்லில் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்ட மின் மீட்டரை மீண்டும் பொருத்த வேண்டும் என மின் வாரிய அலுவலா்களுக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அற்புதராஜ்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது வீட்டிலிருந்த மின் மீட்டா் பெட்டியை, கடந்த மாா்ச் மாதம் முன்னறிவிப்பின்றி மின் வாரிய அலுவலா்கள் எடுத்துச் சென்றதோடு, கூடுதல் மின் கட்டணமும் வசூலித்ததனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அற்புதராஜ் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சித்ரா, அவகாசம்கூட வழங்காமல் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்ட மின் மீட்டா் பெட்டியை மீண்டும் அற்புதராஜ் வீட்டில் பொருத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தீா்ப்பு அளித்தாா். தீா்ப்பை நிறைவேற்றாதபட்சத்தில், ரூ.10ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் மின் வாரியத்துக்கு அறிவுறுத்தினாா்.