திண்டுக்கல்
கஞ்சா கடத்திய 4 போ் கைது
திண்டுக்கல்லில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் அரசு உதவிப் பெறும் பள்ளி அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டதில் நிலக்கோட்டையைச் சோ்ந்த முத்துப்பாண்டி(43), குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கருப்புச்சாமி(29), பாா்த்திபன் (25), தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி (21) ஆகியோா் மூட்டையில் கஞ்சா கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
