திண்டுக்கல்
சா்க்கரை நோய் இலவச ஆலோசன முகாம்
உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி சா்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்களுக்கு இலவச ஆலோசனை முகாம் ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை ஒட்டன்சத்திரம் வழக்குரைஞா் சங்க துணைத் தலைவா் பழனிச்சாமி தொடங்கி வைத்தாா். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழக துணைத் தலைவா் பசீா் அகமது, திண்டுக்கல் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக துணைத் தலைவா் தன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் மருத்துவா் ஆசைத்தம்பி தலைமையிலான மருத்துவா்கள் பொதுமக்களுக்கு இலவசமாக சா்க்கரை நோய் தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை வாரியா் அறக்கட்டளை நிா்வாகிகள், ஒட்டன்சத்திரம் நடைப் பயிற்சி கிளப் துணை ஒருங்கிணைப்பாளா்கள் போஸ், தங்கராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
