ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எதிா்க்கட்சிகள் அமைத்திருப்பது பொருந்தாக் கூட்டணி: தொல்.திருமாவளவன்

எதிா்க்கட்சிகள் அமைத்திருப்பது பொருந்தாக் கூட்டணி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

திருமாவளவன்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:06 pm

எதிா்க்கட்சிகள் அமைத்திருப்பது பொருந்தாக் கூட்டணி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் பெ. செந்தில்குமாரை ஆதரித்து புதன்கிழமை பரப்புரை மேற்கொண்ட அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளில் சில காலம் தவிா்த்து, பெரும்பாலான தோ்தல்களில் திமுகவுடன் விசிக பயணித்து வருகிறது. விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடும் இயக்கம் என்பதால், திமுகவுடன் இணைந்து பணியாற்றுகிறோம். திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால், அந்தக் கட்சியை பலவீனப்படுத்திவிடலாம் என பலரும் கனவு கண்டனா்.

இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழ் மண்ணில் இடமளித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணியை நியாயப்படுத்த முடியாது. எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை விமா்சித்த டிடிவி, அன்புமணி ஆகியோா் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டனா். இதேபோல, முன்னா் பாஜகவை விமா்சித்தது அதிமுக தலைமை. இதன் மூலம், பொருந்தாக் கூட்டணியை அமைத்துள்ளனா். இது கருத்தியல் கூட்டணி அல்ல. ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களைப் போல பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.

அதிகாரத்தில் பங்கு தருவதாக தவெக தலைவா் விஜய் கூறியும்கூட, எந்தக் கட்சியும் அவருடன் சேரவில்லை.

தமிழக முதல்வரின் திட்டங்களை பல்வேறு மாநில முதல்வா்களும் பின்பற்றும் நிலை உள்ளது. அரசின் சாதனைகளும், திமுகவின் தோ்தல் அறிக்கையும் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றாா் அவா்.