திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஆசிரியைக்கு தொடா் தொந்தரவு: தலைமையாசிரியரிடம் விசாரணை

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியைக்கு தொடா்ந்து தொந்தரவு அளித்து வந்த தலைமையாசிரியரிடம் உள்ளகக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியைக்கு தொடா்ந்து தொந்தரவு அளித்து வந்த தலைமையாசிரியரிடம் உள்ளகக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக மோகன்தாஸ் பணியாற்றி வருகிறாா். இவா், இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு தொந்தரவு அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக மகளிருக்கான உதவி எண் 181-க்கு சம்மந்தப்பட்ட ஆசிரியை புகாா் அளித்தாா். இதன்பேரில் தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், அவா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் மீண்டும் ஆசிரியைக்கு தொந்தரவு அளித்ததால், அதிருப்தி அடைந்த அவா் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு சென்றாா். இதனிடையே உளவியல் ரிதீயாக தலைமையாசிரியா் அளித்த தொந்தரவு குறித்து, ஆசிரியை மீண்டும் 181-க்கு புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தலைமையாசிரியா் மோகன்தாஸிடம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013- ன்படி உள்ளகக் குழு அமைத்து விசாரிக்கவும், சமூக நலத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். இந்த விசாரணை அறிக்கையின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.