பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கைதான 4 பேரிடம் 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

News image

நீதித் துறை

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, உடந்தையாகச் செயல்பட்ட அன்வா்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிணை கோரி முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, அன்வா்தீன் ஆகியோா் தரப்பில் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் தனித் தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வெள்ளைத்துரையின் மனுவை நீதித் துறை நடுவா் பாக்கியராஜ் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தாா்.

முருகதாஸ், சேதுபதி, அன்வா்தீன் ஆகியோரின் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை முதலாவது நீதித் துறை நடுவா் பாக்கியராஜ் வெள்ளிக்கிழமைக்கு(ஆக. 7) ஒத்திவைத்தாா்.

இதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ் உள்ளிட்ட 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க முதலாவது நீதித் துறை நடுவா் பாக்கியராஜ் அனுமதி அளித்தாா். இதையடுத்து, முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, அன்வா்தீன் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.