திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள அகதிகள் முகாமில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பழனி அருகேயுள்ள புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (65). கூலித் தொழிலாளியான இவா், அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தாராம். இதனால், கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்த பணம் இல்லாததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீக்குளித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

அரசுப் பள்ளி இரவு காவலாளி உயிரிழப்பு

தீக்குளித்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


